நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே!!!

Updated in 2022-Aug-14 02:54 AM

நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் எனப் பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள். ஒருவனின் எண்ணத்தை பொறுத்து தான் அவனின் வாழ்க்கை அமையும். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, வாழ்வில் நீங்கள் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமெனில் உங்களுக்கு மிக மிக அத்தியாவசியமானது நேர்மறை எண்ணம்.

எந்தவொரு விஷயத்தையும் நேர்மறை எண்ணத்தோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகிப்பாருங்கள் உங்களை வெற்றி தேவதை தொற்றிக்கொள்ளும். நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள்