அரசு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்... சர்வ கட்சி ஆட்சி முயற்சி தோல்வியாம்

Updated in 2022-Aug-14 03:09 AM

நாடாளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள், கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைய விரும்பாத நிலையில் சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிபர் ரணில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும் அரசாங்கத்துடன் கட்சிகளிலிருந்து தனித்தனியாக அரசுடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.