பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

Updated in 2022-Aug-17 05:10 AM

பிரான்ஸ் அதிபருடன் பேசினார்... பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

இந்த உரையாடலின் போது பிரான்சில் காட்டுத்தீயை கையாளுவதில் இந்தியாவின் ஒற்றுமையை தெரிவித்தார். இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு , பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய சவால்களில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.