ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு சாதனை செய்த பெண்

Updated in 2022-Sep-28 05:58 AM

கின்னஸ் சாதனை படைத்த பெண்... தென்னாப்பிரிக்காவில் ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு, சிமானிலே என்ற பெண்மணி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

டர்பன் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு தலா 10 அவுன்ஸ் அதாவது தலா கால் கிலோ எடையுள்ள வேகவைக்கப்பட்ட கோழிக்கால்கள் உணவாக வழங்கப்பட்டன. கோழிக்கால்களை சிலர் மென்று தின்றனர். சிலர் அப்படியே விழுங்கினர்.

60 விநாடிகள் நீடித்த இந்த போட்டியின் முடிவில், 4.26 அவுன்ஸ் அதாவது சுமார் 120 கிராம் எடையுள்ள கோழி கால்களை சாப்பிட்ட, சிமானிலே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.