மறுப்பு தெரிவித்த முன்னாள் அதிபர்... முயற்சி தோல்வியானது

Updated in 2022-Oct-02 10:53 AM

கடைசி நிமிடத்தில் மறுப்பு தெரிவித்தார்... அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் மீண்டும் நட்புறவை ஏற்படுத்துவதற்கு வர்த்தகர் ஒருவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சமீபத்தில் தனது வீட்டில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொள்ள இருவரையும் இந்த தொழிலதிபர் அழைத்துள்ளார்.

இந்த அழைப்பை அவர்கள் முதலில் ஏற்றுக்கொண்ட போதிலும், அதில் கலந்துகொள்ள முடியாது என முன்னாள் அதிபர் சந்திரிக்கா தெரிவித்துள்ளார். இதேவேளை ராஜபச்சாக்களை விரட்டியடித்து நல்லாட்சி அரசை ஏற்படுத்துவதில் ரணில்- சந்திரிகா கூட்டு வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது.