டி20 உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா அணிக்கு கூடுதல் வாய்ப்பு

Updated in 2022-Oct-03 04:00 AM

சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இறுதிகட்ட ஆயத்தப் பணிகளில் பல்வேறு அணிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர். அதன்பின் நியூசிலாந்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி நேராக ஆஸ்திரேலியா சென்று மூன்று டி20 தொடரில் விளையாடுகிறது. அதேபோன்று மேற்கிந்திய தீவுகள் அணி டி20 போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாட்சனிடம் எந்த அணிக்கு உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாக வாட்சன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய ஆடுகளம் மற்ற ஆடுகளங்களை விட சற்று வித்தியாசமாக இருப்பதாகவும், மற்ற அணிகள் அதை மாற்றிக்கொள்ள சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது என வாட்சன் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்றார். இந்திய அணி வரும் 6ம் தேதி ஆஸ்திரேலியா சென்று பெர்த்தில்  பயிற்சியில் தொடங்குகிறது. இந்திய அணி வரும் 17ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் 19ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.