ஈரான் விமானத்திற்கு வந்த வெடி குண்டு மிரட்டல்... எச்சரிக்கை செய்த இந்தியா

Updated in 2022-Oct-04 05:13 AM

ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... இந்திய வான்வெளியில் நுழைந்த ஈரானைச் சேர்ந்த பயணிகள் விமானமான மகான் ஏர்-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து டெல்லி காவல்துறைக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மகான் ஏர் விமானம் டெல்லியில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டு ஜெய்பூரில் தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதன் விமானி ஜெய்பூரில் தரையிறங்க மறுத்ததை அடுத்து இந்திய விமானப்படையில் இரண்டு போர் விமானங்கள், வான்வெளியிலேயே மகான் ஏர் விமானத்தை திருப்பி விட்டன.

பஞ்சாப்பில் மற்றும் ஜோத்பூரில் இருந்து சு-30எம்கேஐ போர் விமானங்கள் மகான் ஏர்-ஐ டெல்லியில் தரையிறங்க விடாமல் மாற்றி அமைத்தன. அதன்பின் சீனா செல்வதற்கான வான்வெளியில் நுழைந்த மகான் ஏர் தன் பயணத்தைத் தொடர்ந்தது. இந்நிலையில் எந்தத் தகவலும் பகிரப்படாத நிலையில், விமானத்தின் தற்போதைய நிலை மர்மமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.