டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்ய முனைப்பு காட்டும் இந்தியா

Updated in 2022-Oct-04 05:14 AM

டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா அணி உள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது.

இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் 237 ரன்கள் குவித்த போதிலும் போராடி தான் வெற்றிபெற முடிந்தது.

தொடரை வென்று விட்டதால் இனி கடைசி ஆட்டத்தில் நெருக்கடி இல்லை. இதனால் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி துணை கேப்டன் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோருக்கு களம் காண வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 

டி20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் தென் ஆப்பரிக்காவுக்கும் இதுதான் உலக கோப்பை போட்டிக்கு முந்தைய கடைசி டி20 போட்டியாகும்