வசூலில் சக்கைப்போடு போடும் பொன்னியின் செல்வன்... மணிரத்னத்தின் செம சாதனை

Updated in 2022-Oct-06 02:16 AM

பொன்னியின் செல்வன் படம் வெளியான ஐந்து நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. கூடிய விரைவில் 500 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி விஜய்க்கு குடும்ப பார்வையாளர்கள் உள்ளனர், மேலும் அவரது படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகின்றன. ஒரு குடும்பத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய் படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனால் விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய்யின் பிகில், சர்கார் ஆகிய படங்கள் வெளியான ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்தன. மேலும் மாஸ்டர் படமும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் 500 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.

பொன்னியின் செல்வன் படம் வெளியான ஐந்து நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. கூடிய விரைவில் 500 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலை எடுத்தால் விஜய்யின் படங்கள் இருக்கும். ஆனால் தற்போது தளபதி வசூலில் பின்தங்கியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.