டிஆர்பி ரேட்டிங்கில் பின்தங்கியது... பாரதிதாசன் சீரியலை வெளியேற்ற போகுது விஜய் டிவி

Updated in 2022-Oct-06 02:17 AM

பாரதிதாசன் காலனி சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் கடைசி இடத்தை பிடித்து வருவதால் இந்த சீரியலை ரத்துசெய்ய விஜய் டிவி முடிவு செய்துள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கிற்காக ஒவ்வொரு சேனலும் வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்துவதால், விஜய் டிவி மற்ற எல்லா சேனல்களுக்கும் கடும் போட்டியாக மாறி வருகிறது. இதனால் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுப்பதில் தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியின் புத்தம் புதிய குடும்ப சீரியலான பாரதிதாசன் காலனி சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று மதியம் ஒளிபரப்பான சீரியலுக்கு ரசிகர்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த சீரியல் ஒரு காலனியில் வாழும் மக்களை சுற்றி வருகிறது. கதாநாயகி ஐஸ்வர்யா ராய், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா, கருணாவிலாசினி, பிரபாகர் சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி சீரியல் பிரபலங்கள் நடித்துள்ளதால் இது டாப் சீரியல் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் பாரதிதாசன் காலனி சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் கடைசி இடத்தை பிடித்து வருவதால் இந்த சீரியலை ரத்துசெய்ய விஜய் டிவி முடிவு செய்துள்ளது. மேலும், விஜய் டிவியில் அக்டோபர் 9ஆம் தேதி மாலை முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளதால், விஜய் டிவி தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் வகையில் டிஆர்பியில் மந்தமான சீரியல்களை முடித்துக் கொள்ளும்.

இந்த தொடர் ஏற்கனவே முத்துக்குள்சிப்பி என்ற புத்தம் புது சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து பாரதிதாசன் காலனியும் முடிவுக்கு வருகிறது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.