விஜய் 67 படத்தின் படப்பிடிப்புக்காக பிரமாண்ட செட்... விஜய்க்கே தெரியாதாம்

Updated in 2022-Oct-06 05:11 AM

விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம் அருகே உள்ள பயனூரில் தொடங்கவுள்ளது. இதற்காக பிரமாண்ட செட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால் இது வரை விஜய்க்கு தெரியாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தற்போது தொடர் படங்களில் பிசியாக இருக்கிறார். இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அனைத்து ஸ்கிரிப்ட் வேலைகளையும் லோகேஷ் செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆனால் இப்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் ஒரு பாடலும் மீதம் உள்ளன. இதற்கிடையில் விஜய் 67 படத்திற்கான சூட் வேலைகளை லோகேஷ் கவனித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் 20 நாட்களுக்குள் தொடங்க முடிவு செய்துள்ளதாக லோகேஷ் தற்போது அதற்கான லொகேஷன்களை சரிபார்த்துள்ளார்.

அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம் அருகே உள்ள பயனூரில் தொடங்கவுள்ளது. இதற்காக பிரமாண்ட செட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால் இது வரை விஜய்க்கு தெரியாது.பெப்சி அமைப்பினர் பைனூரில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை பிலிம் சொசைட்டிக்காக வழங்கியுள்ளனர். இங்குதான் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தற்போது இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்திற்காக ரகசியமாக வேலை செய்து வரும் லோகேஷ் கனகராஜ், விஜய்யிடம் எப்போது சொல்ல போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.