Advertisement Contact

சுரங்கத்திற்குள் போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலை; 20 பேர் கைது

Updated in 2020-Feb-21

சுரங்கம் அமைத்து போதை சிகரெட் தயாரித்தவர்கள்... ஸ்பெயினில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ஸ்பெயின் உள்துறை அமைச்சகம், அண்டலுசியன் (Andalusian) நகரில் உள்ள தொழுவம் ஒன்றில் சுரங்கம் அமைத்து தடை செய்யப்பட்ட தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் 3500 சிகரெட்டுகளை தயாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது. அங்கிருந்து ஒரு லட்சத்து 53 ஆயிரம் சிகரெட் பாக்கெட்டுகள், 17 ஆயிரது 600 கிலோ புகையிலை தூள் மற்றும் 144 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.