Web Advertisement Contact

கதை பிடித்திருந்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்; நடிகையின் கண்டிஷன்

Updated in 2020-Mar-15

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்... பிரபல நடிகையிடம் இயக்குனர் ஒருவர் கதை சொல்லிய பின், கதை பிடித்திருந்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நடிகை சொல்லிவிட்டாராம்.

பிரபல நடிகரின் வாழ்க்கை வரலாறு படத்தில் வாரிசு நடிகை நடித்த பிறகு இனிமேல் ஏனோ, தானோ வேடங்களில் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். அதிலும், கவர்ச்சி வேடங்களை முற்றிலும் ஒதுக்கி தள்ளி வருகிறாராம்.

தற்போது இயக்குனர் ஒருவர் நடிகையிடம் கதை ஒன்றை சொல்லி இருக்கிறாராம். நடிகைக்கு கதை ரொம்ப பிடித்து நடிக்க சம்மதித்தாராம். அதன்பின் இயக்குனர் இந்த படத்தில் நீங்கள் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று கூறினாராம்.

அதற்கு நடிகை கொஞ்சம் கூட கவர்ச்சி கிடையாது. அப்படித்தான் நடிக்க வேண்டும் என்றால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி இயக்குனரை அனுப்பிவிட்டாராம்.