Advertisement Contact

பிரபல நடிகருக்காக சம்பளத்தை குறைத்த நடிகை

Updated in 2020-Mar-17

தமிழில் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டவர் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் சம்பளத்தை அதிகளவு குறைத்திருக்கிறாராம்.

தமிழில் "முகமூடி" அணிந்து வந்த நடிகை, ஒரு படத்திலேயே ஓரங்கட்ட பட்டாராம். ராசி இல்லாத நடிகை என்று கூறப்பட்ட நடிகை, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இந்தியில் மான் நடிகர் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். பாலிவுட்டுக்கு செல்லும் நடிகைகள் பலரும் சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கி விடுவார்களாம். இந்த விஷயத்தில் நடிகை அப்படியே நேர் எதிராக இருக்கிறாராம். தான் வாங்கி வரும் ஊதியத்தை விட குறைவாகவே இந்த படத்தில் வாங்க சம்மதித்திருக்கிறாராம். 

மான் நடிகருடன் இணைந்து நடிக்க நடிகை பல வருட கனவாம். இப்போது அமைந்திருப்பதால் சம்பளத்தை பெரியதாக கருதவில்லையாம்.