Advertisement Contact

சுறுசுறுப்பாக செயல்பட உதவும் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ்

Updated in 2020-Mar-18

ங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸைக் காலை உணவாக உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். 

தேவையான பொருட்கள்: தேங்காய் - ஒரு மூடி, கறிவேப்பிலை - 1 கைப்பிடி, நாட்டு சர்க்கரை - சிறிதளவு, ஊறவைத்த பாதாம் பருப்பு - 10.

செய்முறை: தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம்பருப்பு, நாட்டுச்சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

பின்னர் அரைத்த ஜூஸை பெரிய வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக்கொள்ளவும். பிறகு தேங்காய் - கறிவேப்பிலை - பாதாம் விழுதை மீண்டும் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி.

குறிப்பு: இதில் கறிவேப்பிலைக்குப் பதிலாக கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகள் சேர்த்தும் அரைக்கலாம்.