Web Advertisement Contact

இ.கியூ.8 நிறுவனத்தின் புதிய ப்ளூடுத் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Updated in 2020-Mar-19

புதிய அறிமுகம்... இ.கியூ.8 ஆடியோ நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இ.கியூ.8 ஆடியோ நிறுவனத்தின் முதல் ஆடியோ சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இ.கியூ.8 இயர்பட்ஸ் என அழைக்கப்படுகிறது. 

புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் குவால்காம் ஆப்ட்எக்ஸ் ஆடியோ தொழில்நுட்பம், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங், ப்ளூடூத் 5.0, சி.வி.சி. 8.0 தொழில்நுட்பம், IPX5 சான்று உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது. இ.கியூ.8 இயர்பட்ஸ் குறைந்த எடையில், சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சார்ஜிங் கேஸ் வெளிப்புறம் ஸ்டோன் பிளாக் ஃபேப்ரிக் கொண்டிருக்கிறது. இவை குவால்காம் 3020 சிப்செட், ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, ஏ.ஏ.சி. ஆடியோ டீகோடிங் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஹைஃபை சவுண்ட், தலைசிறந்த பேஸ் மற்றும் 6 எம்.எம். நியோடிமியம் கிராஃபைன் டிரைவர்களை கொண்டிருக்கிறது.

ஆட்டோ பேரிங் மற்றும் ஆட்டோ சார்ஜிங் அம்சம் கொண்ட இ.கியூ.8 ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் கண்ட்ரோல்கள், டூயல் மைக்ரோபோன்களை கொண்டிருப்பதால் ஆழைப்புகளை மேற்கொள்வது, மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதிகளை வழங்குகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக ஏழு மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் சார்ஜிங் கேஸ் பயன்படுத்தினால் கூடுதலாக 40 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும். 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் இ.கியூ.8 யு.எஸ்.பி. டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. இதனை 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் இ.கியூ.8 இயர்பட்ஸ் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் இ.கியூ. அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.