Advertisement Contact

"விளையாட்டுப் போட்டிகளை வரும் ஏப்ரல் 15ம தேதி வரை நடத்த கூடாது"

Updated in 2020-Mar-19 09:44 AM

போட்டிகள் நடத்தக்கூடாது... வரும் ஏப். 15-ஆம் தேதி வரை போட்டிகள், தகுதிச் சுற்று போன்றவற்றை நடத்தக்கூடாது என தேசிய சம்மேளனங்களுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி உள்ள நிலையில், சா்வதேச விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஐபிஎல், உள்பட பல்வேறு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

வரும் ஏப். 15-ஆம் தேதி வரை போட்டிகள் மற்றும் தோ்வுச் சுற்றுகளை நடத்தக்கூடாது. மேலும் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ள வீரா்களுக்கு தனியாக பயிற்சி முகாம்கள் நடத்தலாம்.

மேலும் பயிற்சி முகாம்களில் எந்த வீரரோ அல்லது பயிற்சியாளரையோ அனுமதிக்கக் கூடாது. ஒலிம்பிக் முகாம் நடைபெறும் இடத்தில் உள்ள வீரரை வெளியிடங்களுக்கு அனுப்பக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
எந்தவொரு விளையாட்டு வீரரும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் அதிகம் போ் கூடும் இடங்களுக்கும் அவா்களை செல்ல விட மாட்டோம். ஒலிம்பிக் தகுதி பெற்ற அல்லது தகுதி பெறும் நிலையில் உள்ளவா்களுக்கு மட்டுமே விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. அவா்கள் பயிற்சியை தவற விட்டால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றாா்.