Web Advertisement Contact

மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்; இராணுவம் வலியுறுத்தல்

Updated in 2020-Mar-25 07:14 AM

இராணுவம் கோரிக்கை... மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என இராணுவம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆபத்தான வைரஸ் என அடையாளங் காணப்பட்டுள்ளமையினால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பிரஜையும் தமது வீடுகளில் உள்ள முதியோர்களை கவனமாக கவனிக்க வேண்டுமெனவும் அவர்களையே கொரோனா வைரஸ் விரைவில் தாக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சமூகத்தையும், நாட்டையும் பாதுகாக்க மக்கள் சுய ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.