Web Advertisement Contact

2, 3ம் திகதிகளில் ஓய்வூதியம் வழங்கப்படும்; பிரதமர் அலுவலகம் தகவல்

Updated in 2020-Mar-29 09:27 AM

2ம் தேதி ஓய்வூதியம்... ஓய்வூதியம் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி விசேட செயலணி  எடுத்த தீர்மானத்திற்கமையவே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த நாட்களில் பெற முடியாதவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வழிமுறைகளில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய தபாலினூடாகவும் வங்கிக் கணக்குகள் வாயிலாகவும் ஓய்வூதியத்தை பயனாளிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.