Web Advertisement Contact

நார்த்யோர்க்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

Updated in 2020-Mar-30 04:53 AM

நார்த்யோர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்டன் சாலையின் மேற்கே பிஞ்ச் அவென்யூ வெஸ்ட் மற்றும் ருமிக் சாலை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அவசர குழுவினருக்கு தகவல் அளித்தனர். 

தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து துப்பாக்கிச் சூட்டில் படுகாயடைந்தவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர் குறித்து விபரங்கள் வெளியிடப்படவில்லை.