Web Advertisement Contact

ஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டித்து அறிவிப்பு

Updated in 2020-Mar-30 06:23 AM

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிரந்தஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இவை தவிர்ந்த 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நேற்று காலை தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.