Web Advertisement Contact

பிரிட்டனில் 22 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Updated in 2020-Mar-30 06:25 AM

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 22,141ஆக உயர்ந்துள்ளது.

வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2,619 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,408 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் இங்கிலாந்தில் – 18,594 பேரும், ஸ்கொட்லன்டில் – 1563பேரும், வேல்ஸில் – 1451பேரும், வட அயர்லாந்தில் – 533பேரும் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உட்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.