கோடீஸ்வர மாப்பிள்ளை தேடும் சின்ன நம்பர் நடிகை

Updated in 2020-Apr-20 05:43 AM

கோடீஸ்வர மாப்பிள்ளை தேடும் நடிகை... கோலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சின்ன நம்பர் நடிகை ஒருவர், கோடீஸ்வர மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.

சின்ன நம்பர் நடிகைக்கு அவருடைய தாயார் சில ஆண்டுகளாக மாப்பிள்ளை தேடி வருகிறாராம். இதற்கிடையில் அவருக்கும், தெலுங்கு நடிகரும் காதல் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. 

இருவரும் திருமணம் வரை நெருங்கி, பின்னர் பிரிந்து விட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

தற்போது அந்த நடிகை மாப்பிள்ளை பார்ப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். “மாப்பிள்ளை என்னை புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும்” என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் நடிகை தனது தாயாரிடம் கூறியிருக்கிறாராம். அதோடு மாப்பிள்ளை பெரும் கோடீஸ்வரராக இருக்க வேண்டுமாம். சிக்குபவர் யாரோ? என்று கோலிவுட் கேள்வி எழுப்பி உள்ளது.