ரீமேக் படங்களா? ஆளை விடுங்கப்பா சாமிங்களா; தெறித்து ஓடும் சமர்த்தான நடிகை

Updated in 2020-Apr-25 10:00 AM

சென்னை: ரீமேக் படங்களா... ஆளை விடுங்கப்பா சாமிங்களா என்று தெலுங்கு வாரிசு நடிகரை மணந்த சமர்த்தான நடிகை பெரிதாக கும்பிடு போடுகிறாராம்.

திருமணத்திற்கு பின்னரும் இந்த நடிகை நடித்த நேரடி தமிழ், தெலுங்கு படங்கள் செம ஹிட் அடித்தது. அந்தளவிற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் தமிழிலும், தெலுங்கிலும் இந்த நடிகை நடித்த ரீமேக் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் நடிகைக்கு ரீமேக் படங்கள் செட் ஆகாது என்று கூறி வந்தார்கள்.

இதனால் சோகத்தில் இருந்த நடிகை சமூக வலைதள பக்கத்தில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஒரு படத்தின் ரீமேக்கில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்துள்ளது. அவ்வளவுதான் ஆளை விடுங்கப்பா. உள்ள கொஞ்சம் நஞ்சம் மார்க்கெட் நிலவரத்தையும் அழிச்சுடாதீங்க என்று பெரிய கும்பிடு போட்டாராம்.