பாட்டி என்று கலாய்க்கும் ரசிகர்கள்; வெறுத்து போன நடிகை

Updated in 2020-Apr-29 08:58 AM

ஆன்ட்டி கூட இல்லை பாட்டி என்று செம கலாய்ப்பு கலாய்த்து வருகின்றனர் முதல் படத்திலேயே ஓ" போட்ட நடிகையை.

ஆரம்பத்தில் குலோப்ஜாமூன் என்று பாராட்டிய ரசிகர்கள் இப்போது பாட்டி என்று கலாய்க்கின்றனர். சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த ஓ போட்ட நடிகை, மீண்டும் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.

அவ்வப்போது தன் கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறாராம். இவரிடம் ரசிகர் ஒருவர், 'உங்கள் வயது என்ன?' எனக் கேட்க, அதற்கு நடிகை, ''எனக்கு எப்போதுமே 16 வயது தான்,'' என கூறினாராம்.

ஆனால், இதற்கு பலர் பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று கலாய்த்து வருகிறார்களாம். இதனால் நடிகை நொந்து போய் உள்ளாராம்.