பேயாக நடிக்கணுமா... அப்போ சம்பளம் அதிகம் வேண்டும்; நடிகை பிடிவாதம்

Updated in 2020-May-04 03:30 AM

பேய் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்கும் நடிகையால் தயாரிப்பு தரப்பு யோசித்து வருகிறதாம்.

கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அந்த நடிகை அதிக சம்பளம் கேட்கிறாராம்.

கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகம் உருவாவது தற்போது டிரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக சூப்பர் ஹிட்டான பேய் படத்தின், 2ம் பாகம் தயாராகிறதாம். இதில் ஹீரோயினாக நடிக்க முதல் பாகத்தில் நடித்த நடிகையை இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 

ஆனால் சொந்த தயாரிப்பு தவிர வேறு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை என்று முதலில் முரண்டுபிடித்த நடிகை பின்னர் நிபந்தனைகளுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். சம்பளம் அதிகம் கொடுத்தால் ஓகே என்கிறாராம். அந்த நடிகைக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கலாமா? அல்லது வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமா? என்று தயாரிப்பு தரப்பு யோசிக்கிறார்கள்.