செலவை இழுத்து விடும் அந்த இயக்குனரா...

Updated in 2020-May-05 02:12 AM

தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மூன்றெழுத்து இளம் இயக்குனர் தயாரிப்பாளர் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறாராம். காரணம் இவர் பட்ஜெட்டை தாண்டி படத்திற்கு செலவை இழுத்து விடுவார் என்பதால்.

தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு இருக்கும் மூன்றெழுத்து இயக்குனர் இதுவரை முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கி செம ஹிட் அடித்துள்ளார். இருப்பினும் இவர் சின்ன காட்சிக்கு கூட பெரிய அளவில் செலவை இழுத்து விட்டு விடுவார். இதுபோக கதை திருட்டு பிரச்சனைகளிலும் இயக்குனர் சிக்கினார். இதனால் தயாரிப்பாளர்கள் இவரை கண்டாலே "தெறி"த்து ஓடுகின்றனராம்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத இயக்குனர் பாலிவுட்டில் முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகளை உலாவ விட்டாராம். ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனதாம். அடுத்ததாக இவர் சமீபத்தில் விளையாட்டை களமாக வைத்து இயக்கிய படத்தில் நடித்திருந்த முன்னணி நடிகரிடம் போய் நிற்க அவரோ கண்டுக் கொள்ளவே இல்லையாம். 

காரணம் விசாரித்த இயக்குனருக்கு தன்னை நம்பி படம் தயாரிக்க யாரும் முன்வராததற்கு என்ன காரணம் என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.  இதனால் அடுத்த படத்தை இயக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறாராம் இயக்குனர்.