திரைத்துறை தொழிலாளர்களை கண்டு கொள்ளாத சின்ன நம்பர் நடிகை

Updated in 2020-May-15 04:01 AM

கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் சின்ன நம்பர் நடிகை தன் துறை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித உதவிகளும் செய்யாததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு பிரபல நடிகர்- நடிகைகள் அனைவரும் உதவி செய்திருக்கிறார்களாம். ஆனால் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை மட்டும் எந்த உதவியும் செய்யவில்லையாம்.

இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களாம். செல்லப்பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஏழை மக்களிடமும் காட்டட்டும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.