நடித்தால் ஹீரோதான் மைக் நடிகரின் பிடிவாதம்

Updated in 2020-May-15 04:02 AM

1980 களில் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் நடிகர்  தற்போதும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிப்பதால் பல நல்ல கதாபாத்திரங்களை இழந்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் 80 களில் மைக் பிடித்து பிரபலமானவர் அந்த நடிகர். சில பிரச்சனைகளால் நடிக்காமல் இருந்த இவர் தற்போது நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதை அறிந்த பலர் அவரை தேடி சென்று கதை சொல்கிறார்களாம். இதில் பல நல்ல கேரக்டர்களாம். இவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்கின்றனர்.

ஆனால் அவரோ தன்னிடம் கதைக் கூற வரும் இயக்குனர்களிடம் எனக்கு என்ன வயசு ஆயிடுச்சு. நடிச்சா ஹீரோவாக தான் நடிப்பேன் என சண்டையிட்டு அனுப்பி வைக்கிறாராம். இதனால் இவரே இனிமேல் வலிய போய் கேட்டாலும் யாரும் சான்ஸ் கொடுக்கும் மனநிலையில் இல்லையாம்.