Web Advertisement Contact

கதை விவாதத்தில் தலையிடும் அல்வா நடிகை; கோபத்தில் இளம் இயக்குனர்

Updated in 2020-May-15 08:56 AM

படத்தில் புக் செய்தால் கதை விவாதத்திலும் மூக்கை நுழைக்கும் அல்வா நடிகையால் இளம் இயக்குனர் செம கோபத்தில் இருக்கிறாராம. 

80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த அல்வா நடிகை. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, ஒரு சில படங்களில் நடிப்பது என்று இருந்து வருகிறாராம்.

தற்போது பள்ளிக்கூட ஆசிரியை கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடிகையிடம் ஒரு இளம் இயக்குனர் கதை சொல்லியிருக்கிறாராம். நடிகைக்கு அந்தக் கதை ரொம்ப பிடித்துப்போய்விட்டது. இதையடுத்து கதை விவாதத்தில் நடிகையும் கலந்துகொண்டு கதையை மேலும் மெருகேற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கிறாராம்.

இது படத்தின் இயக்குனருக்கு செம கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.