Web Advertisement Contact

வாய்ப்புகள் வரவில்லை; திருமணம் செய்து கொள்ள கூறும் தாயுடன் நடிகை சண்டை

Updated in 2020-May-20 01:08 AM

வாய்ப்புகள் வரவில்லை, திருமணம் செய்து கொள் என்று தாய் சொல்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறாராம் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தலைகாட்டிய நடிகை.

தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் தலைகாட்டிய நடிகை சமீபத்தில் "மிக மிக அவசரமாக" வந்தார். அந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார். பட வாய்ப்பு இல்லாததால் சமூக வலைத்தளத்தில் டான்ஸ், பாட்டு என்று நானும் இருக்கேன் என்பது போல் செய்து வருகிறார்.

இந்நிலையில் வாய்ப்புகள் தான் வரவில்லையே திருமணம் செய்து கொள் என்று நடிகையின் தாய் கட்டாயப்படுத்துகிறாராம். ஆனால் நடிகையோ படம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு திருமணத்திற்கு மறுத்து வருகிறாராம். 

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறதாம். நடிகை ஓவர் பில்டப் கொடுப்பதால்தான் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.