Web Advertisement Contact

வாத்துக்கள் சாலையை கடந்து செல்ல உதவிய காவலர்கள், பொதுமக்கள்

Updated in 2020-May-21 07:00 AM

சிறிய உயிர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என்பது போல் மனிதாபிமானத்துடன் வாத்துக்கள் சாலையை கடக்க உதவியுள்ளனர் காவலர்கள் மற்றும் பொதுமக்கள்.

ரஷ்யாவில் சாலையை கடக்க முடியாமல் தவித்த வாத்துகள் காவலர்களின் பாதுகாப்புடன் கடந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாஸ்கோ நகரில் வாத்துகளின் குடும்பம் ஒன்று அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதற்காக சாலைக்கு வந்துள்ளது. ஆனால் சாலையில் விரைந்து சென்ற வாகனங்களைக் கண்டு சாலையைக் கடக்க முடியாமல் திகைத்து நின்றன.

இதையடுத்து வாத்துக்கூட்டத்திற்கு வழிகாட்ட காவலர்களும், பொதுமக்களும் களத்தில் இறங்கினர். காவலர்கள் தங்களது ரோந்து வாகனத்தை சாலையின் குறுக்காக இயக்க, அதனை ஒட்டி நடந்து சென்ற வாத்துகள் பாதுகாப்பாக சாலையின் மறுபக்கத்தை அடைந்தன. இந்த வீடியோ இணையத்தில் பரவி பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது.