Web Advertisement Contact

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "செல்பி"

Updated in 2020-May-21 07:03 AM

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு "செல்பி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார்.

இவர்களுடன் ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். காதல், எமோஷனல், ஆக்‌ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கும் இப்படத்திற்கு ‘செல்பி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.