Web Advertisement Contact

சந்திரமுகி-2ல் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை; ஜோதிகா தகவல்

Updated in 2020-May-21 07:03 AM

சந்திரமுகி-2 படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை என்று ஜோதிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இப்படத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஜோதிகாவை இரட்டை வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து ஜோதிகா சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். “சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க, யாரும் என்னை அணுகவில்லை. அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.