Web Advertisement Contact

60 நாட்களாக பூட்டிக்கிடந்த கடை; ஓய்வெடுக்கும் இடமாக மாற்றிக் கொண்ட மலைப்பாம்பு

Updated in 2020-May-21 11:56 AM

60 நாட்களாக பூட்டியிருந்த கடையில் மலைப்பாம்பு குடியேற கடைக்காரர் அச்சத்தில் அலறிய சம்பவம் திருப்பதியில் நடந்துள்ளது.

ஊரடங்கு காரணத்தால் 60  நாட்களுக்கும் மேல் திருப்பதியில் இருக்கும் கடைகள் மூடியே இருந்தது. தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. 

இதில் மஞ்சள் குங்குமம் உள்ளிடவை விற்கும் கடையை உரிமையாளர் திறந்துள்ளார். அப்போது கடைக்குள் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இதையடுத்து பெரிய போராடத்துக்கு பிறகு ஒருவழியாக அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். 

பல நாட்கள் பூட்டியே கிடந்த இடம் பாம்பு தங்குமிடமாக மாறியதை பார்த்த மற்ற கடைக்காரர்கள் கடைகளை திறக்க தயக்கம் காட்டுகின்றனர். வேறெதாவது வனவிலங்குகள் கடைக்குள் இருக்குமோ என பயப்படுகின்றனர். 

இதனால் அனைவரது பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளை திறந்து சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.