Web Advertisement Contact

மனநல பாதிப்புக்கு கவுன்சிலிங் வழங்கும் மூர்ஸ் என்ற நாய்க்கு கவுரவ பட்டம்

Updated in 2020-May-22 10:25 AM

மூர்ஸ் என்ற பெயர் கொண்ட நாய்க்கு கவுரவ பட்டம்... அமெரிக்காவில் மனநல பாதிப்புக்கு கவுன்சிலிங் வழங்கும் மூர்ஸ் என்ற நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி அந்நாட்டின் வர்ஜீனியா பல்கலைக்கழகம் சிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் லேபரேடார் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்த, 8 வயதாகிய மூர்ஸ் டேவிஸ் என்ற நாய் வளர்க்கப்பட்டு வருகிறது. இது இந்த பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ துறையில் சிகிச்சை விலங்காக பணியாற்றி வருகிறது. இந்த மூர்ஸ் அங்குள்ள மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களது உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி வருகிறது.

இது கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மருத்துவ மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ கவுன்சில் அளித்து வருகிறது. இதுவரை இந்த மூர்ஸ் 7,500 பேருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த மூர்ஸ் நாயை கௌரவிக்க வேண்டும் என நினைத்த கல்லூரி நிர்வாகம், தற்போது வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மூர்ஸ்க்கு கவுரவப் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு வர்ஜீனியா கால்நடை மருத்துவ கூட்டமைப்பு வழங்கிய `விலங்குகளின் கதாநாயகன்' என்ற விருதையும் பெற்று மூர்ஸ் அசத்தியுள்ளது. இத்தகையை பல்வேறு சிறப்பியல்புகளை தன்னிடம் கொண்டுள்ள இந்த மூர்ஸ் நாய்க்கு புரோஸ்டேட் சுரப்பி என்ற புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அதற்கும் தனியே சிகிச்சை பெற்று வருகிறது.