வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

Updated in 2020-May-22 11:54 AM

வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என்று குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்த்தன உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். 

40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போதே வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்காக குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் குரல் கொடுத்தனர்.