Web Advertisement Contact

ரஷ்யாவில் கொரோனா பாதித்து 101 மருத்துவர்கள் பலியானதாக அரசு அறிவிப்பு

Updated in 2020-May-27 06:27 AM

101 டாக்டர்கள் பலி... ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதித்து 101 டாக்டர்கள் பலியாகி உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து, 3 லட்சத்து, 70 ஆயிரம் பேருடன், ரஷ்யா, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு, கொரோனாவுக்கு, 3,968 பேர் பலியாகி உள்ளனர். 1.42 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கு, 101 டாக்டர்கள் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 300 டாக்டர்கள் இறந்துள்ளதாக, டாக்டர்களின் நண்பர்கள் வலைதளத்தில் தெரிவித்து, பெயர்களை வெளியிட்டுள்ளனர். இதனால், ரஷ்ய அரசு, கொரோனா பலியை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, ரஷ்யா மறுத்துள்ளது.