அவெஞ்சர்ஸ் தானோஸாக மாறியுள்ள நடிகர் பிரேம்ஜியின் படம்

Updated in 2020-May-27 07:49 AM

கோலிவுட்டில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராக உள்ள பிரேம்ஜி அவெஞ்சர்ஸ் படத்தில் வில்லனாக வரும் தானோஸாக தன்னை மாற்றி வெளியிட்டுள்ள படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

நடிகர் பிரேம்ஜி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அந்த வகையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தின் தோற்றத்தில் இருக்கும் தன் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.