ஐந்தாயிரம் ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய நடிகர் சல்மான்கான்

Updated in 2020-May-27 07:51 AM

5 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வையான உணவுப் பொருட்களை வழங்கி உள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கொரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 5000 ஏழை குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அளித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகைக்காகச் செய்யப்படும் ஷீர் குருமாவுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அடங்கிய பையை 5000 ஏழைக் குடும்பங்களுக்கு அவர் வழங்கியுள்ளார். பீயிங் ஹேங்ரி என்கிற திட்டத்தின் மூலமாக இந்த உதவிகளை செய்துள்ளார்.

மேலும் மும்பை நகரில் யார் யாருக்கெல்லாம் உணவுப் பொருள்கள் தேவைப்படுகிறதோ அனைவருக்கும் வழங்க வேண்டும் என உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிரக்கின் ஓட்டுநர்களுக்கு சல்மான் அறிவுறுத்தியுள்ளார்.