Web Advertisement Contact

முன்னணி பட்டியலில் இடம் பிடிக்க பிரபல நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை

Updated in 2020-May-27 07:52 AM

கொக்கி போடும் நடிகை... சீக்கிரமாகவே பிரபலமான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பிரபல நடிகர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம் உச்ச நடிகரின் படத்தில் நடித்த  நடிகை.

தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகைக்கு இரண்டாவது படமே தளபதியாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதாம். இதனால் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டாராம். 

அடுத்த படத்தில் யாருடன் நடிக்கலாம் என்று யோசித்த நடிகை, முன்னணி நடிகர்கள் வரிசையில் அடுத்த படியாக இருக்கும் பிரபல நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம். விரைவில் அவருடைய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி விடுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.