கோடிகளில் சம்பளம் கேட்டு படவாய்ப்புகளை தவற விட்ட "வருத்தப்படாத" நடிகை

Updated in 2020-Jun-01 06:50 AM

அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை "வருத்தப்படாமல்" கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க முன்னணி இடத்தையும் பிடித்தார். 

இதனால் அடுத்தடுத்து பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கோலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். குடும்பப்பாங்கான வேடங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் அந்த நடிகை நடிப்பிலும் தன் திறமையை காட்டினார். அதற்கு பின்னர்தான் தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்.

லட்சத்தில் இருந்த தனது சம்பளத்தை கோடிக்கு உயர்த்தினார்.
ஒன்றிரண்டு படங்களில் நடித்தவுடன் கோடிகளில் சம்பளம் கேட்ட அந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டவில்லை.

தேடிவந்த வாய்ப்புகளையும் கோடியில் சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மற்ற நடிகைகளுக்கு போய் சேர்ந்தது அந்த படங்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் "வருத்தப்படாத" நடிகை தவறவிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததுதான். 

தற்போது படவாய்ப்பு இல்லாமல் வீட்டு கூரையை பார்த்தபடியே இருக்கிறாராம். அதிர்ஷ்டம் கூரையை பிரித்துக் கொண்டு கொட்டும் என்று நினைக்கிறோரோ என்னவோ.