காதலன் கொடுத்த ஆலோசனை... மீண்டும் சமூக வலைதளத்திற்கு வந்த நடிகை

Updated in 2020-Jun-02 11:36 AM

ரசிகர்களின் கிண்டலை தாங்க முடியாமல் சமூக வலைதளத்தை விட்டு ஒதுங்கிய நடிகை காதலரின் அட்வைஸால் மனம் மாறியுள்ளாராம்.

ஒரே படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அந்த மலையாள நடிகை சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத் தளத்தை விட்டு வெளியேறினாராம். பலரும் கேலி, கிண்டல் செய்வதால் இந்த முடிவை எடுத்ததாக பலரும் பேசி வந்தார்கள்.

தற்போது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சமூக வலைத்தளத்தில் வந்து விட்டாராம் நடிகை. இதற்கு காரணம் அவருடன் படத்தில் நடித்த அவருடைய காதலர் தானாம். இதற்கெல்லாம் பயந்து போகக்கூடாது என்று அவர் அறிவுரை சொன்னதாலேயே மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் சமூக வலைத்தளத்தில் வந்திருக்கிறாராம்.