Web Advertisement Contact

மிளகு கொடிகளை பதம் பார்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்

Updated in 2020-Jun-12 09:48 AM

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டமாக வந்து மிளகு கொடிகளை வெட்டுக்கிளிகள் பதம் பார்க்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தல், மறுபக்கம் வெட்டுக்கிளிகளின் பயமுறுத்தல் என்று வேதனையடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்று வட்டாரத்தில் கூட்டம் கூட்டமாக மிளகு கொடிகளை பதம் பார்க்கின்றன வெட்டுக்கிளிகள்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.