பழைய காதலை வம்பு நடிகருடன் புதுப்பிக்க முயற்சிக்கும் நடிகை

Updated in 2020-Jun-15 02:51 AM

ஒரு பக்கம் பெற்றோர் திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் வம்பு நடிகருடன் காதல் வயப்பட்ட பிரபல நடிகை ஒருவர், பழைய காதலை புதுப்பித்து வருகிறாராம்.

வம்பு நடிகரும், பேய் பட நடிகையும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் பிரிந்து விட்டனர். பின்னர் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதும் இருவரும் அதிகம் நெருக்கம் காட்டிக் கொள்ளவில்லையாம்.

தற்போது நடிகை ஷோலோ கதாநாயகியாக நடிக்கும் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து கொடுத்துள்ளார் வம்பு நடிகர். இந்த படத்தில் நடிக்கும் போது மீண்டும் பழைய காதல் நடிகையின் மனதில் துளிர் விட்டதாம.

இதனால் இதை புதுப்பிக்கும் விதமாக நடிகை மீண்டும் நடிகருடன் அடிக்கடி பேசி வருகிறாராம். இதற்கிடையில் நடிகருக்கு அவரது பெற்றோர் பெண் தேடும் படலத்தை விரைவுப்படுத்தி உள்ளனராம்.