டூயட், கவர்ச்சின்னு பாதையை மாத்திக்க நடிகை முடிவு

Updated in 2020-Jun-21 06:58 AM

டூயட் பாடி, கவர்ச்சி காட்டி நடித்தால் போதும். இனி இதுதான் சரியான பாதை என்று முடிவு செய்துள்ளாராம் அக்கட தேசத்து நாயகி.

அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகை ஒருவர் இனிமேல் கதாநாயகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடும் நாயகியாக மட்டும் நடிக்கலாம் யோசித்து வருகிறாராம்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க முனைப்பு காட்டினாராம். அந்த நடிகை நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த படத்திற்காக அவர் 20 கதைகளை நிராகரித்தாராம். இதையும் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து வருகிறார்களாம்.

இந்த விமர்சனங்களை அந்த நடிகை தாங்குவாரா? இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பாரா? என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளதாம். ‘’இனிமேல் கதாநாயகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடும் நாயகியாக வந்து, கொஞ்சம் கவர்ச்சி காட்டினால் போதும்‘’ என்று அந்த நடிகைக்கு நெருக்கமானவர்கள் யோசனை கூறியிருக்கிறார்களாம். இதுகுறித்து அந்த நடிகை யோசித்து வருகிறாராம்.