Web Advertisement Contact

இன்றைய ராசிபலன் (28.06.2020)

Updated in 2020-Jun-27 07:02 AM

28-06-2020, ஆனி 13, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் - 04.30-06.00

எம கண்டம் மதியம் 12.00-01.30

குளிகன்-  03.00-04.30.

மேஷம் :

சக ஊழியர்களால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். மனதில் எண்ணிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும்.

ரிஷபம் :

புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடுவதால் மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். குறுகிய தூர பயணங்கள் மனதில் ஒருவிதமான மாற்றத்தை அளிக்கும். நினைவாற்றல் மேம்படும்.

மிதுனம் :

செய்யும் முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். தம்பதிகளுக்கிடையே சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

கடகம் :

வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாதத்திறமையால் இலாபமடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

சிம்மம் :

மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடை யே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

கன்னி :

மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உயர் கல்வி சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

துலாம் :

எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மனதில் இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சகம் :

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

தனுசு :

வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். புதிய நண்பர்களிடம் பேசும்போது நிதானத்துடன் இருக்கவும். தொழில் தொடர்பான பணி வாய்ப்புகளில் சாதகமான சூழல் அமையும்.

மகரம் :

எதிர்பார்த்த காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம் :

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மனதிற்கு விருப்பமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும்.

மீனம் :

போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழில் சார்ந்த அலைச்சலும், பதற்றமும் தோன்றி மறையும். பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும் . நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.