Web Advertisement Contact

நடிகர் அஜித் வழிகாட்டுதலில் ஆளில்லா விமானம் வாயிலாக கிருமி நாசினி தெளிப்பு

Updated in 2020-Jun-28 01:13 AM

நடிகர் அஜித்தின் வழிகாட்டுதலில் 'தக்‌ஷா' அணியினர் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நடத்தினர். இந்தப் பணியில் தொடர்புடைய டாக்டர் கார்த்திக் நாராயண் தெரிவித்து இருந்தார்.

அதேபோல் இப்பணியை கர்நாடகாவிலும் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண் கூறியிருப்பதாவது:-

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, பெரிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க ட்ரோன் வாயிலாக ஒரு வழியை உருவாக்கியதற்கு, திரை நட்சத்திரம் அஜித்குமாரின் வழிகாட்டுதலில் செயல்பட்ட தக்‌ஷா அணியினருக்குப் பாராட்டுகள். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.