Web Advertisement Contact

இன்றைய ராசிப்பலன் - 29.06.2020

Updated in 2020-Jun-28 06:36 AM

29-06-2020, ஆனி 13, திங்கட்கிழமை.

இராகு காலம் - காலை 07.30-09.00

எம கண்டம் -  10.30-12.00

குளிகன் - மதியம் 01.20-03.00.

மேஷம் :

புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம் :

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும். பொறுமையுடன் சமாளிக்கவேண்டும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

மிதுனம் :

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம் :

எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். புதிய அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

சிம்மம் :

மனதில் எண்ணிய பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுவிதமான நுணுக்கங்களை பயில்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றி புதிய நபர்களை நியமிப்பீர்கள். கலை சார்ந்த அறிவு மேம்படும். புதிய சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.

கன்னி :

சாதுர்யமான பேச்சுகளால் எண்ணியவை ஈடேறும். வழக்கு விவகாரம் சம்பந்தமான செலவுகள் ஏற்படும். அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் :

தொழில் சம்பந்தமான பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். திட்டமிடாத செலவுகளால் பண நெருக்கடி ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும், கோபமும் உண்டாகும். குணநலன்களில் சிறிது மாற்றம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

விருச்சகம் :

இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப பொருளாதாரம் உயரும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் சரியாகும். தன, தானிய சம்பத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும்.

தனுசு :

பணி செய்யும் இடங்களில் உங்களின் மதிப்பு கூடும். உறவினர்களால் கலகலப்பான சூழல் அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

மகரம் :

திலும் விட்டு கொடுத்து போனால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசினால் பிரச்னைகள் தீரும். பண தேவை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கும்பம் :

திட்டமிட்டு எண்ணிய செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து சுமூகமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்யும் பணிகளில் கவனம் தேவை.

மீனம் :

எதிர்பாராத உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பிறரின் பணிகளையும் சேர்த்து செய்யும் சூழல் உண்டாகும். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சுமாரான தனவரவு கிடைக்கும்.