Web Advertisement Contact

இன்றைய ராசிப்பலன் - 30.06.2020

Updated in 2020-Jun-29 07:16 AM

30-06-2020, ஆனி 16, செவ்வாய் கிழமை.

இராகு காலம் - மாலை 03.00-04.30

எம கண்டம் -  காலை 09.00-10.30

குளிகன் - மதியம் 12.00-01.30.

மேஷம்:

குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும்.

ரிஷபம்:

நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்:

உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம்:

குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும் எனினும் எச்சரிக்கை தேவை. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்:

குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக இருப்பது நல்லது. வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கன்னி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுக்கும் காரியம் எளிதில் முடியும்.

துலாம்:

குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்:

உங்களுக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறப்புகளிடம் ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

தனுசு:

உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்:

எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

கும்பம்:

குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

மீனம்:

பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.